நீட் முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Kalvimalar - News

நீட் முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவுஅக்டோபர் 05,2019,11:13 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'நீட்&' தேர்வு ஆள்மாறாட்டத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் கல்லுாரி நிர்வாகத்துக்கு தொடர்பு உள்ளதா என்பதற்கு, சி.பி.சி.ஐ.டி., பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் காலியாக இருந்த, ௨௦௭ இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்ப, தகுதி அடிப்படையில் கவுன்சிலிங் நடத்த கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆள்மாறாட்டம்

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, நீதிபதிகள், கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, &'நீட்&' நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, சில கேள்விகளை, நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான இடங்கள் நிரப்பப்படாததால், அந்த காலியிடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், பின்பற்றிய தேர்வு நடைமுறை விபரங்களை, ௧௦ தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

நிரப்பப்படாத வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்கள், தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அக்கல்லுாரிகள், இவ்வழக்கில் சேர்க்கப்பட்டன. மேலும், மூன்று மருத்துவக் கல்லுாரி களை, வழக்கில் சேர்க்கும்படி, வழக்கறிஞர் எம்.வேல்முருகன் கோரினார்.எனவே, கோவையில் உள்ள கே.எம்.சி.எச்., கல்லுாரி, சென்னையை அடுத்த குன்றத்துாரில் உள்ள முத்துகுமரன் மருத்துவக் கல்லுாரி, மாதா மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றை, இவ்வழக்கில் சேர்க்கிறோம். இந்த கல்லுாரிகளுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

மோசடி

ஆள்மாறாட்டம் வாயிலாக, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு மாணவர்கள்; நிகர்நிலை பல்கலைகளில், மூன்று மாணவர்கள் சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது; இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரிப்பதாக, வழக்கறிஞர் அப்துல் சலீம் தெரிவித்தார். இந்த மோசடி, எல்லா பகுதிகளிலும் பரவியிருப்பதாகவும், பல மாணவர்கள் மோசடி செய்து, இடம் பெற்றிருக்க கூடும் என்றும் கூறினார்.எனவே, இவ்வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, தமிழக சுகாதாரத் துறை செயலர், டி.ஜி.பி., மற்றும் சி.பி.சி.ஐ.டி.,யின் கூடுதல் டி.ஜி.பி., ஆகியோர் சேர்க்கப்படுகின்றனர்.

மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர் போத்திராஜ், &'நோட்டீஸ்&' பெற்றுஉள்ளனர்.தேர்வு மையத்தில் மாணவர்கள் நுழையும் போது பின்பற்றப்படும் நடைமுறை, மையத்தில் இருப்பவர்கள் தகவல் தொடர்பில் ஈடுபடுவரா என்பது குறித்த விபரங்களை, மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் கீழ்கண்ட விபரங்களை அளிக்க வேண்டும்.

● மோசடி செய்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை

● முறைகேட்டுக்கு எவ்வளவு பேர் உதவி செய்தனர். அரசு அதிகாரிகள் அல்லது கல்லுாரி நிர்வாகத்தின் தொடர்பு உள்ளதா?யாராவது ஒருவரின் ஒத்துழைப்பு இன்றி, மற்றொரு நபரை தேர்வு எழுத வைக்க முடியாது. அடுத்த விசாரணையின் போது, இந்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் போது நீதிபதிகள், &'நாடு முழுவதும் நடந்த, நீட் தேர்வை, 14லட்சம் பேர் எழுதி உள்ளனர். ஒரே ஒரு இடைத்தரகர் மட்டுமே சிக்கினார் என்பதை, ஏற்க முடியாது. அதிகாரிகளின் துணையின்றி ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பு இல்லை&' என்றனர். விசாரணையை, வரும், 15க்கு தள்ளிவைத்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us