பிளஸ் 2 பாடப் புத்தகம் வழங்குவதில் தாமதம் | Kalvimalar - News

பிளஸ் 2 பாடப் புத்தகம் வழங்குவதில் தாமதம்செப்டம்பர் 21,2019,11:31 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்னும் இரண்டாம் பாக புத்தகங்கள் வராததால், வகுப்புகள் பாதிக்கப்படுவதாக, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், பிளஸ் 1க்கு, 2018ம் ஆண்டும்; பிளஸ் 2க்கு, இந்த ஆண்டும், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதல் பாக புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு முடியும் நிலையில், இரண்டாம் பாக புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டிய நிலை உள்ளதால், வகுப்புகளை விரைந்து முடிக்க, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், இரண்டாம் பாக புத்தகம் வராததால், வகுப்புகள் எடுப்பதிலும், பயிற்சி கொடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உடனடியாக, பாடப் புத்தகங்கள் வழங்கினால் மட்டுமே, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிதாக இருக்கும் என, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us