ஆள்மாறாட்டம் எதிரொலி: எம்.பி.பி.எஸ்., சேர்ந்த அனைவரது ஆவணங்களும் ஆய்வு | Kalvimalar - News

ஆள்மாறாட்டம் எதிரொலி: எம்.பி.பி.எஸ்., சேர்ந்த அனைவரது ஆவணங்களும் ஆய்வு செப்டம்பர் 20,2019,14:44 IST

எழுத்தின் அளவு :

சென்னை: நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்த மாணவர் ஒருவர், மருத்துவ படிப்பில் சேர்ந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளதால், இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த, அனைத்து மாணவர்களின் ஆவணங்களையும் சரிபார்க்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிகிறார். இவரது மகன், உதித் சூர்யா, இரண்டு ஆண்டுகளாக, &'நீட்&' தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இந்தாண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதி, 385 மதிப்பெண் பெற்றார். 

கவுன்சிலிங்கில், தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் தேனி மருத்துவக் கல்லுாரி முதல்வருக்கு, இம்மாதம், 11, 13ம் தேதிகளில், அடுத்தடுத்து புகார் வந்தது. புகாரில், உதித்சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.

தேனி மருத்துவக் கல்லுாரி முதல்வர், ராஜேந்திரன் தலைமையில், நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில், மாணவர் உதித் சூர்யா, முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தனர். இதற்கிடையில், &'மருத்துவ இடத்தை கைவிடுகிறேன்&' என, எழுதி கொடுத்துவிட்டு, உதித் சூர்யா தலைமறைவானார். கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், போலீசில் புகார் செய்தார்; மாணவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

போலீசார் தனிப்படை அமைத்து, உதித் சூர்யாவை தேடி வருகின்றனர். அவர்கள் நேற்று சென்னை வந்தனர். மாணவனின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர், நாராயண பாபு கூறியதாவது: உதித் சூர்யா விவகாரத்தில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், கவுன்சிலிங் கடிதம், கல்லுாரி சேர்க்கைக்கான அனுமதி கடிதம் ஆகியவற்றில், ஒரே விதமான புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. சேர்க்கை ஆணைக்கு பின், கல்லுாரியில் சேர, 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அப்போது தான், உதித் சூர்யாவின் புகைப்படம் மாற்றப்பட்டு, கல்லுாரியில் சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., - - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க, அந்தந்த கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், கைரேகை பதிவை அடிப்படை ஆவணமாக வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

அதிகாரிகளுக்கு தொடர்பு? 
இந்த சம்பவத்தில், மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் உதவியின்றி, மாணவன் ஆள் மாறட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. புகைப்படம் ஒன்றாக இருந்தாலும், மதிப்பெண் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, அதிகாரிகள் தவறி விட்டனரா அல்லது முறைகேட்டில் ஈடுபட உதவினரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us