10ம் வகுப்பு பொதுத் தேர்வு புது அட்டவணை வெளியீடு | Kalvimalar - News

10ம் வகுப்பு பொதுத் தேர்வு புது அட்டவணை வெளியீடுசெப்டம்பர் 18,2019,12:20 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2020 மார்ச், 27ல் தேர்வு துவங்க உள்ளது.

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, பொதுத்தேர்வு கால அட்டவணை, இந்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு, இரண்டு தாள் முறை ரத்து செய்யப்பட்டு, ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என, இரு தினங்களுக்கு முன், பள்ளி கல்வித்துறை அறிவித்தது. 

இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்புக்கு மட்டும், தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன. புதிய கால அட்டவணையை, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி நேற்று அறிவித்தார். 

அதன் விபரம்
தேர்வு துவங்கும் நாள்: 2020 மார்ச், 27
தேர்வு முடியும் நாள்: 2020 ஏப்., 13 
தேர்வு முடிவு வெளியாகும் நாள்: 2020 மே, 4 

அட்டவணை 
மார்ச், 27ல், தமிழ் உள்ளிட்ட மொழி பாடம்
மார்ச், 28ல், விருப்ப மொழி பாடம்
மார்ச், 31ல் ஆங்கிலம்; ஏப்., 3ல் சமூக அறிவியல்
ஏப்.,7ல் அறிவியல்
ஏப்., 13ல் கணிதம் தேர்வுகள் நடக்கும். 
இந்த தேர்வுகள் அனைத்தும், காலையில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us