முதுநிலை, ஆராய்ச்சி படிப்புக்கு நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

முதுநிலை, ஆராய்ச்சி படிப்புக்கு நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி.,(Indian Institutes of Technology) மற்றும் ஐ.ஐ.எஸ்., (Indian Institute of Science) கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., பி.எச்டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.,ல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில் சேர, ஜாயின்ட் அட்மிஷன் டெஸ்ட்(JAM) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை, கான்பூர் ஐ.ஐ.டி., நடத்துகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு, தற்போது வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி

பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, ST பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வுகள் 7 தாள்களை (பயலாஜிக்கல் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, கணிதம், இயற்பியல், வேதியியல், ஜியாலஜி, மேத்தமேடிக்கல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்) உள்ளடக்கியிருக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 2 தாள்களை எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள மாணவர்கள் ஏதேனும் SBI வங்கி கிளையில் நெட் பேங்க் அல்லது சலான் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் ஒரு தாளுக்கு ரூ.1500, இரண்டு தாளுக்கு ரூ.2,100 செலுத்த வேண்டும்.

அனைத்துப்பிரிவு மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் SC, ST பிரிவு மாணவர்கள், ஒரு தாளுக்கு ரூ.750, இரண்டு தாளுக்கு ரூ.1,050 செலுத்த வேண்டும்.

சலான் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அக்.,12ம் தேதிக்குள்ளும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், அக்.,16ம் தேதிக்குள்ளும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://gate.iitk.ac.in/jam/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us