தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு | Kalvimalar - News

தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு

எழுத்தின் அளவு :

தமிழ் நாடு விவசாயப் பல்கலைக் கழகம் (டி.என்.ஏ.யு.,) 1971ல் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக் கழகம் விவசாயத் தொழில் நுட்பம் சார்ந்த பிரிவில் இந்தியாவிற்கே பெருமைமிகு அடையாளமாக திகழ்கிறது. இந்த பல்கலைக் கழகத்தில் உதவி பேராசியர்கள் பிரிவில் உள்ள 166 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்

தமிழ் நாடு அக்ரிகல்சுரல் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 31 பாடப் பிரிவுகளின் கீழ் உதவி பேராசியர் பதவி காலியாக உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக விண்ணப்பிக்கும் பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பு தேவைப்படும். முழு விபரங்களை இணையதளத்தில் இருந்து அறியவும்.

தேர்ச்சி முறை

நெட் மற்றும் ஸ்லெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பத்தை www.tnau.ac.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற வேண்டும். இதனுடன் ரூ.500/- க்கான டி.டி.,யை "The Comptroller, Tamil Nadu Agricultural University, Coimbatore641 003" என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்கதாக எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 27.09.2013

முழுமையான விபரங்களை இணையதளம் வழியாக அறிய: http://www.tnau.ac.in/advt092013.pdf

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us