சிட்னி பல்கலையுடன் இணைந்து ஆராய்ச்சி மையம் துவக்க முடிவு | Kalvimalar - News

சிட்னி பல்கலையுடன் இணைந்து ஆராய்ச்சி மையம் துவக்க முடிவுசெப்டம்பர் 10,2019,10:58 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள, சிட்னி பல்கலையுடன் இணைந்து, ஆராய்ச்சி மையம் துவக்க உள்ளது.

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பாலச்சந்திரன், கால்நடை பராமரிப்பு மற்றும் சேவைகள் இயக்குனர் ஞானசேகரன் ஆகியோர், ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளனர்.சிட்னி பல்கலையை, நேற்று பார்வையிட்டனர். அங்கு ஒட்டுண்ணியல் துறை பேராசிரியர், டேவிட் எமெரி தலைமையில், டாக்டர் ஜான் கவுஸ், ஆசிரியர் புர்டி, நவநீத் தாண்ட், மெஹன் காத்கென் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

மாணவர், பேராசிரியர், விஞ்ஞானிகள் பரிமாற்ற, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள, சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சேலத்தில் அமைய உள்ள, ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை பார்வையிடவும், அதில், சிட்னி பல்கலையின் பங்களிப்பை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அறிஞர்கள் குழு, தமிழகம் வர உள்ளது. மேலும், தமிழ்நாடு கால்நடை பல்கலையுடன், சிட்னி பல்கலை இணைந்து, ஆராய்ச்சி மையம் துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us