ரயில்வே பணிகளில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வலியுறுத்தல் | Kalvimalar - News

ரயில்வே பணிகளில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வலியுறுத்தல்செப்டம்பர் 10,2019,10:57 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ரயில்வே பணிகளில், தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என, தமிழக, எம்.பி.,க்கள், ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களில் நடக்கும், ரயில்வே திட்டப் பணிகள் குறித்து, எம்.பி.,க்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சென்னை, பூங்கா நகரில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது.அதில், தெற்கு ரயில்வே பொது மேலாளர், ராகுல் ஜெயின், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர், பி.மகேஷ், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், யு.ஆர்.ராவ் மற்றும் டி.ஆர்.பாலு, திருநாவுக்கரசர் உட்பட, 26 எம்.பி,க்கள் பங்கேற்றனர்.

எம்.பி.,க்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் நிலையங்களின், டிக்கெட் கவுன்டர்களில், தமிழ் தெரியாத, பிற மாநில ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், தமிழ் மட்டும் தெரிந்தவர்கள், அந்த ஊழியர்களுடன் பேசி, தகவல் பெறுவதில் சிரமப்படுகின்றனர்.இதனால், தமிழக ரயில்வே பணிகளில், தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள், ரயில்வே தேர்வுகளை, தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்.மதுரை - துாத்துக்குடி இடையில் அமைக்கப்படும், இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட, பல ரயில்வே திட்டங்கள், மந்தகதியில் நடக்கின்றன. அனைத்து ரயில் திட்டங்களையும் விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளன.

கூடுவாஞ்சேரி - ஆவடிகூட்டத்திற்கு பின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, எம்.பி., - டி.ஆர்.பாலு கூறுகையில், &'&'ஆவடியில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் வழியாக கூடுவாஞ்சேரிக்கு, புதிய ரயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டும், பணி துவங்கவில்லை. உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த பணிகளை விரைவாக துவக்க வேண்டும்,&'&' என்றார்.தென் சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில், &'&'ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே, ரயில் பாதைக்கு, 500 மீட்டர் இடம் கையகப்படுத்தும் பணி தாமதமாகிறது. இதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக, அந்த ரயில் பாதை செயல்பாட்டிற்கு வரவில்லை. அந்த பணியை முடித்து, விரைவாக ரயில் இயக்க வேண்டும்,&'&' என்றார்.

ஒருங்கிணைப்பாளர்கள் புதிதாக நியமனம்!
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு, வேலுார், எம்.பி., கதிர் ஆனந்த்; சேலம் கோட்டத்திற்கு, கோவை, எம்.பி., நடராஜன்; திருச்சி கோட்டத்திற்கு, ராஜ்யசபா, எம்.பி., சிவா; மதுரை கோட்டத்திற்கு, தென்காசி, எம்.பி., தனுஷ்குமார் ஆகியோரை, ஒருங்கிணைப்பாளர்களாக, தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.எம்.பி.,க்கள், தங்கள் தொகுதியில் நடக்கும், ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து, ஒருங்கிணைப்பாளராக உள்ளவர்களிடம் தெரிவிக்கலாம்.அவர்கள் அவற்றை, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தெரிவித்து, விரைவில் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us