கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட தடை | Kalvimalar - News

கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட தடைசெப்டம்பர் 10,2019,10:54 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதில், தமிழ் வழியில் படித்தோருக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

கணினி ஆசிரியர் தேர்வு, 2019 ஜூனில் நடந்தது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட, கணினி ஆசிரியர் தேர்வை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், தமிழ் வழி கல்வி பயின்ற ஐந்து பேர், வழக்கு தொடுத்தனர். ஹால் டிக்கெட்டில் மட்டுமே, ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும், அறிவிப்பாணையில் எதுவும் குறிப்பிடவில்லை என்றும், மனுவில் கூறப்பட்டது. இம்மனு, நீதிபதி, தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், பிரசன்னா ஆஜரானார். 

&'கணினி ஆசிரியர் தேர்வை, ஏன் தமிழில் நடத்தவில்லை?&' என, நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை, தேர்வு முடிவை வெளியிட, நீதிபதி தடை விதித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us