பள்ளிகளில் பாலியல் புகார் தடுக்க விரைவில் புதிய சட்டம் | Kalvimalar - News

பள்ளிகளில் பாலியல் புகார் தடுக்க விரைவில் புதிய சட்டம்செப்டம்பர் 10,2019,10:45 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளிகளில், பாலியல் துன்புறுத்தலால், மாணவியர் பாதிக்கப்படாமல் தடுக்கவும், ஆசிரியர்கள் மீதான பொய் புகார்களை தவிர்க்கவும், ஆசிரியர், மாணவர் பாதுகாப்பு சட்டம் இயற்ற, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முதற்கட்ட சட்ட ஆலோசனை முடிந்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நாடு முழுவதும், டாக்டர்கள் மீது பொய் புகார்கள் கூறப்படும் பட்சத்தில், அவர்களை பாதுகாக்க ஏதுவாக, டாக்டர்கள் பாதுகாப்பு சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. வலியுறுத்தல்இதேபோன்று, &'ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு சட்டம் வேண்டும்&' என, ஆசிரியர் சங்கங்கள், அரசிடம் வலியுறுத்தி உள்ளன.

பள்ளிகளில், மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்களின் மீது, மாணவர்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.சில குறிப்பிட்ட மாணவர்கள், ஜாதி, மத மோதலிலும், ஒழுக்க கேடான விஷயங்களிலும் ஈடுபடுவதை, ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்கள் மீது மாணவர்களும், சில பெற்றோரும் பொய் புகார் அளிக்கும் நிலை உள்ளது. அதேபோல, மாணவர் - மாணவியரிடத்தில், ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் முறையும், பல இடங்களில், பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மது அருந்தி விட்டு, பள்ளிக்கு வருவது, மாணவியரிடம் தவறாக நடப்பது, பாலியல் துன்புறுத்தல் செய்வது, மாணவர்களை கொத்தடிமைகள் போல, சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகளில், சில ஆசிரியர்களும் சிக்குகின்றனர்.

ஆலோசனை
இந்த பிரச்னைகளை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக ஆசிரியர், மாணவர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சட்ட வல்லுனர்களுடன் முதற்கட்ட ஆலோசனை முடிந்துள்ளது. ஆசிரியரோ, மாணவரோ தவறு செய்தால், அதை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, போலீசுக்கு தகவல் அளிக்கும்.

போலீசாரும், பள்ளி கல்வி அதிகாரிகளும், ஆசிரியர், மாணவர் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி, நடவடிக்கை எடுப்பர். மேலும், வழக்குக்கான செலவையும், சம்பந்தபட்டவர்களிடம் வசூலிக்கப்படும் வகையில், புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. விரைவில், சட்ட மசோதா தயாரிக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us