கேஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் கெய்ல் நிறுவனம் இயற்கை எரிவாயு தொடர்புடைய பொதுத் துறை நிறுவனமாகும். தற்சமயம் இந்த நிறுவனம் சர்வ தேச அளவில் தடம் பதிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பிரிவில் 2014ல் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெக்கானிகல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல் ஆகிய நான்கு பிரிவுகளிலான இன்ஜினியரிங் பதவிகள் இதன் மூலம் நிரப்பப்படும்.
வயது
24.01.2014 அன்று 28 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதிகள்
தொடர்புடைய இன்ஜினியரிங் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். கேட் 2014 தேர்வுக்கு விண்ணப்பித்து வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்ச்சி முறை
கேட் 2014 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் கேட் 2014 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இரண்டாவது கட்டமாக கெய்ல் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.10.2013
முழுமையான விபரங்களை இணையதளம் வழியாக அறிய: https://gailebank.gail.co.in