ராணுவ கல்லூரியில் இலவச நர்சிங் கல்வி | Kalvimalar - News

ராணுவ கல்லூரியில் இலவச நர்சிங் கல்வி

எழுத்தின் அளவு :

புனேயில் இயங்கிவரும் ராணுவ மருத்துவ கல்லூரியில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். விவாகரத்து பெற்ற பெண்களும், குழந்தையில்லா விதவைகளும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகள், படிக்கும் 4 ஆண்டுகளுக்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை. மாதம்தோறும், ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும் உணவு, தங்குமிடம் மற்றும் யூனிபார்ம் ஆகியவையும் வழங்கப்படும்.

படிப்பு முடிந்த பின், மாணவர்கள் 5 ஆண்டுகள் ராணுவ நர்சிங் பிரிவில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, ராணுவ பணியில் சேர மறுத்தாலோ. பயிற்சிக்கான செலவு மொத்தத்தையும் திரும்ப செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டால், இதற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

கல்வித்தகுதி

பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகள், ராணுவ உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும். 1989, அக.,1க்கும், 1997 ஜூலை,31க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில், 90 நிமிடத்திற்குள் தேர்வு எழுதும்படி வினாத்தாள் இருக்கும். எழுத்துத் தேர்வில் தேர்வுபெறும் மாணவிகள், ஏப்ரல் மாதம் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை "http://indianarmy.nic.in" என்ற இணைய முகவரியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டில்லியில் உள்ள ராணுவ அலுவகத்திற்கு அக்.,8ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.,8

மேலும் விவரங்களுக்கு: http://indianarmy.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us