யோகா மருத்துவ படிப்பு 28ல் கவுன்சிலிங் | Kalvimalar - News

யோகா மருத்துவ படிப்பு 28ல் கவுன்சிலிங்ஆகஸ்ட் 22,2019,15:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு, 28ம் தேதி, கவுன்சிலிங் துவங்குகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு என, 252 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம், அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்தில், 28ம் தேதி துவங்குகிறது. அன்று, சிறப்பு பிரிவினர், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.இட ஒதுக்கீடு அடிப்படையிலான, பொது கலந்தாய்வு, 29ம் தேதி நடக்கிறது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us