இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன் | Kalvimalar - News

இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன்ஆகஸ்ட் 22,2019,14:59 IST

எழுத்தின் அளவு :

சென்னை: இஸ்ரோவில் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், சந்திரயான் 2 தற்போது நீள்வட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் சந்திரயான் 2.,வின் பாதை நீர்வட்டப்பாதையிலிருந்து சுற்றுவட்டப்பாதையாக மாற்றப்படும். செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கும் போது, சந்திரயான் 2 ன் வேகம் முற்றிலுமாக குறைக்கப்படும்.

சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவில் ஆண்,பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us