ஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் பெயில் | Kalvimalar - News

ஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் பெயில்ஆகஸ்ட் 22,2019,14:59 IST

எழுத்தின் அளவு :

சென்னை: டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.9 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

6 முதல் 8 ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 9 ம் தேதி நடந்தது. மொத்தம் 3,79,733 பேர் தேர்வு எழுதினர். இரண்டு தாள்களாக இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 82 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெறலாம். இந்நிலையில் முதல் தாள் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2 ம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று (ஆக.,21) இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 99.9 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3,79,733 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பாடம் நடத்த முதல் தாளிலும், 6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த 2 ம் தாளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

வாசகர் கருத்து

அடுத்து ஏன்ன நடவடிக்கை? வீட்டிற்கு அனுப்ப முடியாது. ஒரே வழி சிறு சிறு பிரிவாக பயிற்சி அளித்து மீண்டும் தேர்வு ஏழுத செய்ய வேண்டும். இனிமேலாவது குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஆசிரியர் பெருமக்களுக்கு புத்துணர்வு பயிற்சி(updats) அளிப்பதை வரைமுறை படுத்த வேண்டும். மாணவர்களுக்கு மட்டும் தேர்வை அதிகரித்து கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை. சட்டியில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும்
by V.Sekhar,Australia    24-ஆக-2019 04:58:44 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us