1 லட்சம் பேருக்கு வேலை போகும் அபாயம் | Kalvimalar - News

1 லட்சம் பேருக்கு வேலை போகும் அபாயம்ஆகஸ்ட் 21,2019,12:10 IST

எழுத்தின் அளவு :

ஆட்டோ மொபைல் துறையில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இப்பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க, ஜவுளித்துறை போல், ஆட்டோ மொபைல் துறைக்கும், தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும், என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், பாண்டியராஜன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மதுரை உலக தமிழ்ச் சங்கத்திற்கு, தமிழக அரசு, ஏற்கனவே, 50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழ்ச் சங்கத்தில் சிற்பங்கள், பளிங்கு சிலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, டெண்டர் ரத்து செய்யப்பட்டு, கற்சிலையில் அமைக்க, ஒரு வாரத்தில் டெண்டர் விடப்படும்.

நாடு தழுவிய அளவில், ஆட்டோ மொபைல் துறை, சரிவை சந்தித்து வருகிறது.நம் நாட்டில், தமிழகத்தில் தான், 42 சதவீதம் உற்பத்தி நடக்கிறது. ஆட்டோ மொபைல் துறை, தற்போது மின்சார தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என, அந்த துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூட, பெரிய ஆட்டோ மொபைல் தொழிற்சாலை துவங்கப்பட்டது. மத்திய அரசுதொடர்ந்து, 50 ஆண்டுகள் நீடித்து இருக்கக்கூடிய அந்த தொழிற்சாலையில், ஏழு ஆண்டு களுக்குள் உற்பத்தி மாடலையே மாற்ற வேண்டும் என்றால் கடினம் தான்.

இத்துறையில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இப்பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க, ஜவுளித்துறை போல், ஆட்டோ மொபைல் துறைக்கும், தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us