நீட் சட்ட மசோதா வழக்கு விசாரணை முடித்து வைப்பு | Kalvimalar - News

நீட் சட்ட மசோதா வழக்கு விசாரணை முடித்து வைப்புஆகஸ்ட் 14,2019,13:11 IST

எழுத்தின் அளவு :

நீட் சட்ட மசோதா வழக்கு விசாரணை முடித்து வைப்புசென்னை: மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக மாணவர்கள் - பெற்றோர் நல சங்கத்தின் தலைவர் அருமைநாதன் தாக்கல் செய்த மனு: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறும் வகையில் இரண்டு சட்ட மசோதாக்களை தமிழக சட்டசபை நிறைவேற்றியது. இதற்கு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டது. பின் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்களாகியும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.

ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் மூவர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய &'டிவிஷன் பெஞ்ச்&' முன் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு தரப்பில் &'இரண்டு மசோதாக்களும் ௨௦௧௭ செப்.௧௧ல் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவதை செப்டம்பர் ௧௮ல் நிறுத்தி வைத்தார்.

இரண்டு மசோதாக்களும் ௨௦௧௭ செப். ௨௨ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டன&' என கூறப்பட்டது. இதையடுத்து மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட தகவலை சட்டசபையில் கூட தமிழக அரசு தெரிவிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் &'&'நீட் மசோதாக்கள் குறித்து சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி ௧௧ கடிதங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது&'&' என்றார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us