காவலர் பணி எழுத்து தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம் | Kalvimalar - News

காவலர் பணி எழுத்து தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்ஆகஸ்ட் 14,2019,12:38 IST

எழுத்தின் அளவு :

சென்னை : &'காவலர் பணிக்கான, எழுத்து தேர்வில் பங்கேற்பதற்கான, &'ஹால் டிக்கெட்&' என்ற நுழைவு சீட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்&' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறைக்கு, ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்களாக, 2,465 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல, சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை காவலர், 5,962; இரண்டாம் நிலை, சிறை காவலர், 208; தீயணைப்பு வீரர், 191 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, மார்ச், 6ல் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு, ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் என, பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, வரும், 25ல், சென்னை உட்பட, 32 மாவட்ட தலைநகரங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான நுழைவு சீட்டை, www.tnusrbonline.org என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அவ்வாறு செய்ய முடியாத விண்ணப்பத் தாரர்கள், 044 - 4001 6200 என்ற தொலைபேசிக்கும், 97890 35725 என்ற, மொபைல் போன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us