பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் | Kalvimalar - News

பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்ஆகஸ்ட் 13,2019,12:23 IST

எழுத்தின் அளவு :

மதுரை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் தொடர்பான அவமதிப்பு வழக்கில், அரசு தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஹக்கீம் தாக்கல் செய்த மனு தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு குழு அமைத்தது. அக்குழு 2018--2021க்கான கட்டணத்தை நிர்ணயித்துவிபரங்களை வெளியிட உத்தரவிடவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 

2018 மார்ச்சில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, &'2018 ஏப்.,30 க்குள் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து, அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்,&' எனக்கூறி பைசல் செய்தனர். இதை நிறைவேற்றாததால் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக்குழு தனி அலுவலர் ஞானசேகரன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஹக்கீம் மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், &'8105 பள்ளிகள் விண்ணப்பித்தன. 7903 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து, குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 202 பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டட உரிமம் உட்பட முக்கிய ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றை சமர்ப்பிக்கும்பட்சத்தில் கட்டணம் நிர்ணயித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,&' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், &'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து செப்.,13 அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,&' என்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீரான கல்வி கட்டணம் விதிமுறைகளை சட்டத்தின் கீழ் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதில் தனியார் பள்ளி, அரசு பள்ளி என வேறுபடுத்த கூடாது. எல்லா பள்ளி மாணவ மாணவிகளை ஒரே மாதிரியாக பாவிக்க வேண்டும். தவிர ஏழை எளிய பாமர மக்களின் பிள்ளைகள் வகுப்பு கட்டணம் கட்ட முடியாமல் குறைந்த வருமானத்தில் திண்டாடுகின்றனர்.
by Ashanmugam,India    13-ஆக-2019 15:46:13 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us