மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவு | Kalvimalar - News

மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவுஜூலை 22,2019,11:26 IST

எழுத்தின் அளவு :

மாணவர் சேர்க்கை விபரங்கள், &'எமிஸ்&' இணையதளத்தில் முரண்பட்டிருந்தால், உரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும், பள்ளிகளில் படிக்கும், 1.50 கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர் விபரங்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை எனும், &'எமிஸ்&' இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன; குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 

பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், சில பள்ளிகளில் ஆய்வு செய்ததில், &'எமிஸ்&' இணையதளத்தில், மாணவர் விபரங்கள், &'அப்டேட்&' செய்யப்படாமல் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. 

சேர்க்கை விபரங்கள் வேறுபட்டுள்ளன.இதற்கு காரணமான, அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, &'எமிஸ்&' தளத்தில் உள்ள மாணவர் சேர்க்கை விபரத்தை, முதன்மைக் கல்வி அலுவலர்கள், வகுப்பு வாரியாக, வரும், 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us