பி.டி.எஸ்., படிப்பில் 662 இடங்கள் நிரம்பின | Kalvimalar - News

பி.டி.எஸ்., படிப்பில் 662 இடங்கள் நிரம்பினஜூலை 19,2019,11:13 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பி.டி.எஸ். என்ற பல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் இதுவரை அரசு ஒதுக்கீட்டில் 662 இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1070 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங் ஒமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள 85 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 406 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள 679 இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதற்கு 261 பேர் பங்கேற்றனர்; 171 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர். இதன்படி மொத்தம் 662 இடங்கள் நிரம்பியுள்ளன. பொதுபிரிவுக்கான கவுன்சிலிங் முடிந்த நிலையில் பிற ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று நடைபெறுகிறது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us