நீட் விலக்கு சட்ட மசோதாக்கள்: தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக தகவல் | Kalvimalar - News

நீட் விலக்கு சட்ட மசோதாக்கள்: தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக தகவல்ஜூலை 17,2019,12:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரும், இரண்டு சட்ட மசோதாக்கள், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மாணவர்கள் - பெற்றோர் நல சங்கத்தின் தலைவர், அருமைநாதன் தாக்கல் செய்த மனு: மருத்துவப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் விதமாக, &'நீட்&' எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நீட் தேர்வில், தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறும் வகையில், இரண்டு சட்ட மசோதாக்களை, 2017ல், தமிழக சட்டசபை நிறைவேற்றியது. இதற்கு, கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டது.

பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு, 2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்கள் ஆகியும், மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. ஒப்புதல் கிடைக்க தாமதம் ஏற்படுவதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தனித்தனியே

இதுபோன்று, பிரின்ஸ் கஜேந்திரபாபு, கனகசுந்தரம்,முஸ்தபா ஆகியோரும், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள், நீதிபதிகள், எஸ்.மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர், ஆதி.குமரகுரு ஆஜராகி, &'&'மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, கடிதம் வந்துள்ளது. அதில், தமிழகத்தில் இருந்து, 2017 பிப்ரவரியில், இரண்டு சட்ட மசோதாக்கள் வந்தன. அவற்றை, 2017 செப்டம்பரில், ஜனாதிபதி நிறுத்தி வைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது,&'&' என்றார்.

மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என, விளக்கம் கோரியதற்கு, மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் பதில் அளித்ததாக, மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மசோதாக்கள் பெறப்பட்ட, நிராகரிக்கப்பட்ட தேதி விபரங்களை, மனுவாக தாக்கல்செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சக செயலருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், விசாரணைக்கு எட்டவில்லை. இதற்கிடையில், மத்திய உள்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ள மனுவின் நகல், மனுதாரர்கள் தரப்புக்கு வழங்கப்பட்டது.

அதில், கூறியிருப்பதாவது: தமிழக அரசு அனுப்பிய, இரண்டு சட்ட மசோதாக்களை, 2017 பிப்., 20ல், மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றது. அன்றே, சட்ட அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உள்துறையின் நீதித்துறைப் பிரிவுக்கு, இரண்டு மசோதாக்களும், சுற்றுக்கு விடப்பட்டன.

பரசீலனை

பின், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் உடன், இரண்டு மசோதாக்களும், 2017 செப்., ௧௧ல், ஜனாதிபதியின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டன. இரண்டு மசோதாக்களுக்கும், ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவதை, செப்., 18ல் நிறுத்தி வைத்தார். இதையடுத்து, இரண்டு மசோதாக்களும், 2017செப்., 22ல், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us