புத்தக பையின் எடை எவ்வளவு? | Kalvimalar - News

புத்தக பையின் எடை எவ்வளவு?ஜூலை 12,2019,09:12 IST

எழுத்தின் அளவு :

பள்ளி குழந்தைகள் அவர்களது உடல் எடையில் அதிகபட்சம் 10 சதவீத அளவிற்கு மட்டுமே புத்தக பையை சுமந்து செல்ல வேண்டும் என்றும், இழுத்தும் செல்லும் டிராலி பையாக இருக்கும்பட்சத்தில் அதன் எடை 20 சதவீததிற்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட எடைக்கும் அதிகமாக சுமப்பது, குழந்தையின் உடல்நலனை பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூரே யுனிவர்சிட்டி மற்றும் ஸ்பெயினின் யுனிவர்சிட்டி ஆப் கிரனாடா ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், பள்ளி குழந்தைகளது கால் முழங்கால், கணுக்கால் மற்றும் இடுப்பின் இயக்கவியலை அறிய, அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ்களில் பயன்படுத்தப்படும் முப்பரிமாண &'ஆப்டிகல் மோசன் கேப்சர்’ முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us