அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா? | Kalvimalar - News

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா?நவம்பர் 10,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தரமான கல்விக்காக அறியப்படுவது அண்ணா பல்கலைக்கழகம். எனினும், அதன் தொலைநிலை படிப்புகளை நேரடி படிப்புகளுடன் ஒப்பிட முடியாது. பொதுவாக தொலைநிலைப் படிப்பு முடிப்பவரை பெரிய நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. மிகச்சிறந்த கூடுதல் திறன் பெற்றவர் மற்றும் பணி அனுபவம் பெற்றவருக்கு இது பொருந்தாது.

தொலைநிலை முறையில் படிக்கும் நீங்கள், இதனால் பெறும் நேரத்தை வீணாக்காமல் ஒரு பணியில் சேர்வது மிகுந்த பலனளிக்கும். மேலும், ‘சாப்ட் ஸ்கில்ஸ்’ எனப்படும் மென்திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். எந்த பல்கலைக்கழகமும் தொலைநிலைக் கல்விக்கு, கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்துவதில்லை. எனவே, தரமான பல்கலைக்கழகத்தில் இருந்து நல்லதொரு பட்டம் பெறுகிறோம்; எனினும் இது தொலைநிலைக் கல்விதான் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us