மாணவர்களுக்கு இலவச ஷூ அடுத்த ஆண்டு அமல் | Kalvimalar - News

மாணவர்களுக்கு இலவச ஷூ அடுத்த ஆண்டு அமல்ஜூலை 09,2019,10:25 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'&'அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு, இலவச காலணிக்கு பதிலாக, &'ஷூ மற்றும் சாக்ஸ்&' 10.02 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்,&'&' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். 

சட்டசபையில், பள்ளி கல்வித்துறையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: நடப்பாண்டு, அரசு பள்ளிகளில், 124 கூடுதல் வகுப்பறைகள்; 83 அறிவியல் ஆய்வகங்கள்; 85 நுாலக அறைகள் என, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி, 163.45 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 61.63 கோடி ரூபாய் செலவில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். 

2,650 அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும், 244 அரசு உயர்நிலை பள்ளிகளில், தலா, 75 ஆயிரம் ரூபாய் வீதம், 21.71 கோடி ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவசமாக காலணி வழங்கப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல், காலணிக்கு பதிலாக, 10.02 கோடி ரூபாய் செலவில், ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும். இதனால், 28.64 லட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us