இன்ஜி., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறையவில்லை | Kalvimalar - News

இன்ஜி., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறையவில்லைஜூன் 25,2019,13:29 IST

எழுத்தின் அளவு :

திருச்சி: இன்ஜினியரிங் படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்திலோ, வேலைவாய்ப்பு பிரச்னை இல்லை என, சுயநிதி இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, &'ஆன்லைன்&' கவுன்சிலிங், அண்ணா பல்கலையிடம் இருந்து, இந்த ஆண்டு, அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் கவுன்சிலிங் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயல்முறைகளை விளக்கவும், தமிழ்நாடு சுயநிதி இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் கூட்டமைப்பு, அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், திருச்சியில், கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற, தமிழ்நாடு சுயநிதி இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம், செயலர் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு, குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. 2017 - 18ம் ஆண்டு, இன்ஜினியரிங் படித்தவர்களில், 1.20 லட்சம் பேருக்கும், 2018 - 19ம் ஆண்டில், 1.50 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

&'பயோ மெடிக்கல், ஏரோநாட்டிக்கல்&' போன்ற துறைகளில், வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள், ஆண்டுதோறும், இன்ஜி., படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றன.இன்ஜி., படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்திலோ, வேலை வாய்ப்பு பிரச்னை இல்லை. இன்ஜி., படிப்போடு, துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், மென்திறன் பயன்பாடு போன்றவற்றை கற்றுக் கொண்டால், நிச்சயம் வேலை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us