2ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தேசிய கீதத்தில் பிழை | Kalvimalar - News

2ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தேசிய கீதத்தில் பிழைஜூன் 20,2019,13:21 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'புதிய பாடத்திட்ட புத்தகத்தில், தேசிய கீதத்தில் உள்ள பிழையை திருத்தம் செய்ய வேண்டும்&' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின், பள்ளிக்கல்வி பாடத் திட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களும், பாடங்களும் புதிய வடிவிலும், புதிய அம்சங்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சில அதிகாரிகள், பேராசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதால், சில அம்சங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த வரிசையில், இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேசிய கீதம் பாடல் வரிகள், தவறாக அச்சிடப்பட்டு உள்ளன. இரண்டாம் வகுப்புக்கான, முதல் பருவ கணக்கு மற்றும் சூழலியல் பாடத்துக்கான புத்தகத்தில், தேசிய கீதமும், தமிழில் அதன் பொருளும் அச்சிடப்பட்டுள்ளன. இதில், 10வது வரி இடம் மாறி, பிழை ஏற்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us