இன்ஜி., கவுன்சிலிங் வரிசை வெளியீடு | Kalvimalar - News

இன்ஜி., கவுன்சிலிங் வரிசை வெளியீடுஜூன் 20,2019,13:09 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

நடப்பாண்டில் பி.இ. மற்றும் பி.டெக்., ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.

புகார்கள் எதேனும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு 4 நாட்களுக்குள் மாணவர்கள் தெரிவிக்கலாம். வருகிற 25ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 26ந் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு 26ந் தேதி முதல் 28ந் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us