தொழில்நுட்பமும், கல்வியும் | Kalvimalar - News

தொழில்நுட்பமும், கல்வியும்மே 27,2019,14:18 IST

எழுத்தின் அளவு :

டிஜிட்டல் வளர்ச்சி, ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகிய காரணங்களால் இந்தியாவில் கல்விக் கற்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வீடியோக்கள் மூலம் எண்கள், வடிவங்கள், வண்ணங்கள் ஆகியவற்றையும், பல்வேறு விளையாட்டுகளையும் கற்று வருகின்றனர்.

ஸ்மார்ட் உபகரணங்களில் உள்ள வீடியோக்கள் மற்றும் ஊடாடும் விஷயங்கள், குழந்தைகள் மத்தியில் புகழ்பெற்ற கல்வி கற்கும் முறையாக மாறி வருகிறது. பயன்படுத்துவதற்கு எளிமையான மற்றும் பாதிப்புகள் இல்லாத தன்மையை கொண்ட இந்த முறையானது குழந்தைகளுக்கு கல்வி கற்பதை சுவாரஸ்யமானதாகவும், நாகரீகமானதாகவும் மாற்றி தடையற்ற கற்பிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட அனைத்து வயது குழந்தைகளும் இந்த முறையை தழுவி இயற்கையான முறையில் கல்வி கற்பதுடன் தாங்களாகவே சொந்தமாக கல்வி கற்பதில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டுபிடித்து வருகின்றனர்.


260 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளுடன், உலகிலேயே இந்தியா மிகப்பெரிய கே-12 கல்வி முறையைக் கொண்டுள்ளது. தேர்வுகள் மீதுள்ள பயத்தாலும், எல்லோருக்கும் ஏற்ற ஒரே அளவிலான அணுகுமுறையாலும் எங்களின் முறையில் கல்வி கற்க எல்லோரும் உந்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், இணையத்தின் ஊடுருவல் மற்றும் குழந்தைகள் கல்வி கற்பதில் ஸ்மார்ட் உபகரணங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலை ஆகியவற்றால் இத்துறை மேலும் மாறி வருகிறது.


எதிர்காலத்தில் இது இன்னும் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளவுள்ளது. குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கல்வியை அணுகும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் இந்திய கல்வி சுற்றுச்சூழலானது தொழில்நுட்பத்தை ஆக்க உணர்வாக பயன்படுத்தி வருகிறது. 


கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சில புதிய போக்குகள் வருமாறு:

• கல்வித்துறையில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் சிறந்த அணுகுமுறை, கல்விப் பயிலும் தளத்தை பகிர்தல் மற்றும் அதன் விநியோக வடிவங்கள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். இந்திய கல்வித்துறை சந்திக்கும் 3 முக்கிய பிரச்சினைகளான தரமான கல்விக்கான அணுகுமுறை, பயனுள்ள கற்றல் மற்றும் தனிப்பயனாக்கல் கல்வித்திட்டம் ஆகியவற்றை தொழில்நுட்பம் மூலமே நம்மால் தீர்க்க முடியும்.


மேலும் தொழில்நுட்பத்தால் எளிமையாக்கப்பட்ட கல்வியானது உடனடி பரிமாற்றத்துக்கான வாய்ப்பை வழங்குகிறது. இது மாணவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தரமான கல்வியைப் பயிலுவதற்கான வழியைத் திறக்கிறது. தொழில்நுட்பத்தின் பயன்பாடானது ஏற்கெனெவே பாரம்பரியமான வகுப்பறையில் பயிற்றுவிக்கும் முறையை சுய முயற்சி மற்றும் செயல்முறை மூலமான கற்றல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட டிஜிட்டலில் கற்கும் திட்டங்களாக மாற்றுவதன் ஆரம்ப அறிகுறிகளை ஏற்கெனவே காட்டி வருகிறது.


• புதுமையான தொழில்நுட்ப கருவிகள்: கடந்த சில ஆண்டுகளாக கற்கும் அனுபவங்களை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் புதுமையான தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கற்பிக்கும் வழிமுறைகளுக்கான தயாரிப்புகள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். நம் குழந்தைகள் அடிப்படையில் காட்சிவாயிலாக கற்பவர்களாக இருக்கிறார்கள். காட்சி உருவகித்தல் முறையில் கருத்துகளை விளக்குவதால், அது குழந்தைகள் எளிதிலும் உற்சாகமாகவும் கல்வி கற்க உதவும். உதாரணமாக விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்றவை

மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தை அளிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. விஆர் (VR) மற்றும் ஏஆர் (AR) ஆகியவை விளையாட்டு துறையில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கல்வியிலும் அவை முக்கிய பங்கை வகிக்கும் என்று ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. விஆர் (VR) மற்றும் ஏஆர் (AR) ஆகியவை மாணவர்களை முற்றிலும் புதிய வகையில் வேடிக்கையாகவும் பரீட்சாத்த முறையிலும் கல்வியில் ஈடுபடுத்தக்கூடியதாக உள்ளது.


தற்போது பல்வேறு நிறுவனங்கள் இந்த துறையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இது பல்வேறு நல்ல விஷயங்கள் வருவதற்கு அறிகுறியாக தெரிகிறது.


• தனிப்பயனாக்கப்பட்ட கல்வி முறை - செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), இயந்திரக் கற்றல் (machine learning) மற்றும் தரவு பகுப்பாய்வு (data analytics) ஆகியவை அனைத்தும் ஒன்றிணைந்த சக்தியானது கல்வி கற்கும் மாணவரின் திறன் மற்றும் கற்கும் முறைக்கேற்ற தனிப்பயனாக்கப்பட்ட கற்கும் முறைகளை வழங்குகின்றன.


-திவ்யா கோகுல்நாத், இணை நிறுவனர், பைஜூஸ்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us