திரைப்பட கல்லுாரி, அட்மிஷன் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Kalvimalar - News

திரைப்பட கல்லுாரி, அட்மிஷன் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவுமே 23,2019,11:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக, விதிகளை வகுத்து, உயர் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவு, திரைப்பட கல்லுாரிக்கு பொருந்துமா என்பதற்கு, தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., அரசு திரைப்பட கல்லுாரியில், இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த, விளக்க குறிப்பேடு வெளியிடப்பட்டது. அரசு, சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக, உயர் கல்வித் துறை விதிகளை வகுத்து, ஏப்ரலில் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை பின்பற்றாமல், திரைப்பட கல்லுாரியின் விளக்க குறிப்பேடு உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், ஜான் அலெக்சாண்டர் என்பவர், மனு தாக்கல் செய்தார். 

மனுவில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த, ௧௯௯௭ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், விளக்க குறிப்பேடு உள்ளது. ௨௦௧௯ ஏப்ரல் மாதம், உயர் கல்வித் துறை பிறப்பித்த அரசாணையை பின்பற்றவில்லை. கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இதற்கு முரணாக, நுழைவு தேர்வு நடத்தி சேர்ப்பதாக, திரைப்பட கல்லுாரியின் விளக்க குறிப்பேடு உள்ளது. எனவே, திரைப்பட கல்லுாரி விளக்க குறிப்பேட்டை ரத்து செய்ய வேண்டும். உயர் கல்வித் துறை பிறப்பித்த அரசாணையின்படி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, திரைப்பட கல்லுாரிக்கு பொருந்துமா என்பதற்கு, அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us