100 பேருக்கு 3 மாத இலவச வங்கி தேர்வு பயிற்சி தினமலர் என்.ஐ.பி., வழங்குகிறது | Kalvimalar - News

100 பேருக்கு 3 மாத இலவச வங்கி தேர்வு பயிற்சி தினமலர் என்.ஐ.பி., வழங்குகிறதுமே 23,2019,11:27 IST

எழுத்தின் அளவு :

மதுரை: தினமலர் மற்றும் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் (என்.ஐ.பி.) சார்பில் கல்லுாரி மாணவர்கள் 100 பேருக்கு மூன்று மாத இலவச வங்கித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கல்லுாரி மாணவர்களுக்கான இந்த சிறப்பு பயிற்சியை நான்கு ஆண்டுகளாக தினமலர் நடத்தி வருகிறது. பயிற்சி காலம் மூன்று மாதம். சனி ஞாயிறுகளில் பயிற்சி வழங்கப்படும். இதில் சேருவதற்காக நுழைவு தேர்வு படிவம் தினமலர் நாளிதழில் ஏற்கனவே வெளியானது. ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியான 100 பேரை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு மே 26 காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை மதுரை எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள என்.ஐ.பி.யில் நடக்கிறது. 

ஒரு மணிநேரம் தேர்வு நடக்கும். மாணவர்கள் கல்லுாரியில் படித்துக்கொண்டிருப்பதற்கான அடையாள அட்டையின் நகலை எடுத்து வர வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.என்.ஐ.பி. நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறுகையில் "கல்லுாரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே வங்கித் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பயிற்சியை வழங்குகிறோம். தேர்வை எப்படி எதிர்கொள்வது நேர்காணலில் எப்படி பங்கேற்பது என நிபுணர்கள் பயிற்சி அளிப்பர்" என்றார்.விவரங்களுக்கு 98426 34271 ஐ தொடர்புகொள்ளலாம்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us