அருங்காட்சியகத்தில் பயிற்சி துவக்கம் | Kalvimalar - News

அருங்காட்சியகத்தில் பயிற்சி துவக்கம்மே 15,2019,14:17 IST

எழுத்தின் அளவு :

காஞ்சிபுரம்: பள்ளி மாணவ -மாணவியருக்கான, கோடைக்கால, இலவச கலை பயிற்சி முகாம், காஞ்சிபுரம் அருங்காட்சியக வளாகத்தில், மே 18ல் துவங்குகிறது.

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், மே 18 முதல், 22 வரை, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கோடைக்கால இலவச கலை பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில், அருங்காட்சியக மாதிரி அமைப்பு கலைஞர் மூலம், &'கர்விங்ஸ்&' எனப்படும், சுண்ணாம்பு கட்டியில், சிற்பம் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

மேலும், பயிற்சி நிறைவில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 81899 65485 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்யலாம் என, அருங்காட்சியக காப்பாட்சியர், சு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us