போலி டாக்டர்களின் மருத்துவ நிகழ்ச்சிகள்: தடை விதிக்க கடிதம் | Kalvimalar - News

போலி டாக்டர்களின் மருத்துவ நிகழ்ச்சிகள்: தடை விதிக்க கடிதம்மே 15,2019,14:16 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் ஒளிபரப்பப்படும், சில தவறான, தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்&' என, இந்திய விளம்பர தரக் கட்டுப்பாட்டு கவுன்சிலுக்கு, மாநில சித்தா கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்திய மருத்துவமுறை மருத்துவத்தின் பெயரை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில், மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. பாரம்பரிய மருத்துவர் ஒருவர், தன் பெயரையும், மருத்துவ நிறுவனத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில், பொய்யான உத்தரவாதங்களை மக்களிடையே பரப்புவது, தண்டனைக்குரிய குற்றம்.

இதனிடையே, போலி டாக்டர்கள் பலர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக, தீவிர நோய்களை குணப்படுத்துவதாக, மக்களை ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில், ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் எடையை குறைக்க, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை நம்பி, உடல் நலிவுற்றிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், அத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, மாநில சித்தா கவுன்சிலின் பதிவாளர், ராஜசேகரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, &'டிராய்&' எனப்படும், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், 2018 டிசம்பரில் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, இந்திய விளம்பரத் தர கட்டுப்பாட்டு கவுன்சிலிங்கும், அதே கோரிக்கையை வலியுறுத்தி, மாநில சித்தா கவுன்சில், சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.இந்த விவகாரத்தில், தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தவறான நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதை தடுக்க முடியும் என, சித்தா கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us