நான் இப்போது பி.காம்., படிக்கிறேன். நெட்வொர்கிங் துறையில் பணிபுரிய என்ன படிக்கவேண்டும்? | Kalvimalar - News

நான் இப்போது பி.காம்., படிக்கிறேன். நெட்வொர்கிங் துறையில் பணிபுரிய என்ன படிக்கவேண்டும்? நவம்பர் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நெட்வொர்கிங் துறையில் பணிபுரிய கம்ப்யூட்டர் ஹார்டுவேரை நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஆபரேட்டிங் சிஸ்டம், மைக்ரோ பிராசசர், கம்ப்யூட்டர் ஆர்கிடெக்சர், அசெம்பிளி, பெரிபரல் டிவைஸ், சாப்ட்வேர் நிறுவதல், பி.சிக்களை கான்பிகர் செய்தல், பிரிவென்டிங் மெயின்டெனன்ஸ், டிரபிள் ஷýட்டிங் ஆகியவற்றை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

மேலும் லேன், வேன், ஆகியவற்றை கற்றுத்தரும் அடிப்படை நெட்வொர்கிங் படிப்பு ஒன்றையும் முறையாகப் படிப்பது அவசியம். லேன் என்பது லோக்கல் ஏரியா நெட்வொர்க் அதாவது வின்டோஸ் என்.டி., வின்டோஸ் 2003, யுனிக்ஸ், சோலரிஸ், நாவல் நெட்வேர் ஆகியவற்றில் ஒன்றைக் கொண்டு இன்டிரா நெட் மூலமாக ஒரு இடத்தில் உள்ள அலுவலகத்தின் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல் இதில் ரௌட்டர், சுவிட்ச்சுகள் ஆகியவை உபகரணங்களாக பயன்படுகின்றன.

வேன் என்பது ஒயிடு ஏரியா நெட்வொர்க். இதற்கு இன்டர்நெட்டும், இன்டி ராநெட்டும் இணைக்கப்பட்டு பயன்படுகின்றன. இதில் எம்.சி.எஸ்.இ., சி.சி.என்.ஏ., சி.என்.இ., சோலரிஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ஆகியவை பயன்படுகின்றன.

கம்ப்யூட்டர் சயின்ஸ் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருப்பது அவசியம். இன்ஜினியரிங் அல்லாத படிப்புகளை படித்தவர்களும் இதில் பணிபுரிகிறார்கள். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய சிறப்பான நெட்வொர்கிங் நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ் பெறுவது முக்கியமாகும் பின்வரும் இணையதளங்கள் உங்களுக்கு உதவும்.

 

www.cisco.com

www.computerassociates.com

www.juniper.com

www.prometric.com

www.novell.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us