தேர்ச்சி பெறாதவர்களுக்கான வாய்ப்புகள் | Kalvimalar - News

தேர்ச்சி பெறாதவர்களுக்கான வாய்ப்புகள்ஏப்ரல் 20,2019,21:27 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன் மாதம், துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசு தேர்வு துறை சார்பில், ஜூன், 6 முதல், 13ம் தேதி வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்கள், இப்போதிருந்தே 
பாடங்களை படித்து, தயாராக வேண்டும்.

ஜூனில் நடக்க உள்ள துணை தேர்வுக்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்; எளிதில் தேர்ச்சி பெறலாம். தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். ஏதாவது ஒருபடிப்பில், உங்களுக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. பிளஸ் 2வில், மதிப்பெண் குறைந்தாலும், கல்லுாரி படிப்பில், உங்கள் கவனத்தை செலுத்தி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள். கல்லுாரியிலேயே, &'கேம்பஸ்&' வழியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திறந்தநிலை பள்ளியும் இருக்கு!
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாமலோ, மதிப்பெண் குறைவாகவோ உள்ளவர்கள், தொலைநிலை பள்ளியிலும் படிக்கலாம். மத்திய அரசின், தேசிய திறந்தநிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., நிறுவனத்தில் சேர்ந்து, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம்.இதில், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பின்பற்றப்படும். இதில் படிப்பவர்கள், &'நீட்&' தேர்வில் கூட பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

என்.ஐ.ஓ.எஸ்., பள்ளி படிப்பில் சேர்பவர்கள்,www.nios.ac.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் கூட, என்.ஐ.ஓ.எஸ்., கல்வி முறையில், பிளஸ் 2 வகுப்பில் சேரலாம்.நேரடி பள்ளியில் படித்ததற்கு நிகரான சான்றிதழ், மத்திய அரசால் வழங்கப்படும். இந்த சான்றிதழை பயன்படுத்தி, கல்லுாரிகளில் நேரடியாக, பட்டப் படிப்புகளில் சேரலாம்.இதன், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல அலுவலகம், சென்னை, ராணிமேரி கல்லுாரி அருகில், லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் உள்ளது. அங்கு சென்று விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கைகொடுக்கும் தொலைநிலை பல்கலை!
பிளஸ் 2 தேர்ச்சி பெறா விட்டால், கல்லுாரியில் சேர முடியாதே என நினைப்பவர்களுக்கு, அடைக்கலம் தரும் வகையில், மத்திய அரசின், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையும், தமிழக அரசின், திறந்த நிலை பல்கலையும் உள்ளன.இங்கு, பிளஸ் 2 முடிக்காதவர் களுக்கு, ஆறு மாதம் தகுதி தேர்வு பயிற்சியும், தேர்வும் நடத்தப்படும்.  இதில், மாணவர்கள் எளிதாக தேர்வாகலாம்.அதன்பின், மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை, அதே பல்கலையில் தொலைநிலையில் படிக்கலாம். இந்த படிப்புக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், அரசு வேலைக்கும், போட்டி தேர்வுக்கும் தகுதியானதாகும். இதற்கான விபரங்களை, rcchennai.ignou .ac.in மற்றும் www.tnou.ac.inஎன்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us