தோல்வியே வெற்றியின் முதல் படி! | Kalvimalar - News

தோல்வியே வெற்றியின் முதல் படி!ஏப்ரல் 20,2019,21:29 IST

எழுத்தின் அளவு :

சேலத்தை சேர்ந்த, உளவியல் ஆலோசகர், கதிரவன் கூறியதாவது: 
பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், வரும் தேர்வில் தேர்ச்சி பெற உள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த 
தேர்வில், அதிக மதிப்பெண் பெறாமல் அல்லது தேர்ச்சி பெறாத 
மாணவர்கள், வரும் துணை தேர்வில், சிறந்த மதிப்பெண் எடுக்க 
முடியும். 

இப்போதைய சிறிய தோல்வி, அடுத்த இமாலய வெற்றிக்கு படிக்கல். விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், பள்ளி படிப்பு கூட முடிக்காதவர். அவரது தாய் அளித்த ஊக்கத்தால், உலகம் போற்றும் விஞ்ஞானியானார். இன்னும் எத்தனையோ, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சியே பெறாமல், இரண்டாவது முயற்சியில், பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதேபோல், இன்ஜினியரிங்கும், மருத்துவமும் மட்டும், உயர்ந்த படிப்புகள் அல்ல. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள் போன்ற பலர், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.எல்லா படிப்புக்கும் வேலைவாய்ப்பும், அந்தஸ்தும் உள்ளது. இந்த படிப்பில், மதிப்பெண் வரவில்லையா; வேறு எந்த படிப்பிற்கான திறமை, நம்மிடம் இருக்கிறது என தெரிந்து கொண்டால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட, வாழ்க்கையில், உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.

வாழ்க்கையில் இத்தனை வழிகள் இருப்பதைப் பற்றித் துளியும் சிந்திக்காமல், தற்கொலை செய்து கொள்வது, வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக நினைப்பது, மற்றவர்கள் கிண்டலடிப்பரே என, தாழ்வு மனம் கொள்வது ஆகியவை, வாழ்வில் முன்னேற, எந்த வகையிலும் உதவாது. மாணவர்கள், நம்பிக்கையுடன், நல்ல, நேர்மறையான முடிவு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'படி படி' என, அழுத்தம் தராதீர்!
பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரின், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில், எங்கள் பிள்ளைகள், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அவர்களின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் காரணம். இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும் என, நாங்கள் வற்புறுத்தவில்லை. 

மாறாக, &'நேரத்தை வீணடிக்காமல், பாடங்களை புரிந்து படித்து விட வேண்டும்&' என அறிவுறுத்தினோம்.தினமும், பள்ளியில் நடத்தும் பாடங்களை, வீட்டில் படித்து, அதே நாளில், தேர்வு எழுதி, பார்த்து விட வேண்டும். அந்த பாடங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், அதை குறிப்பெடுத்து, மறுநாள் பள்ளிக்கு சென்றதும், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் பெற வேண்டும் என, வழிகாட்டினோம்.

சரியான நேரத்தில் உணவு, துாக்கம் என்பதும், மாணவர்களுக்கு முக்கியமானது. எனவே, மதிப்பெண் குறைந்த மாணவர்கள், கவலைப்பட வேண்டாம். பிள்ளைகளுக்கு, எந்த விதத்திலும், படிப்பின் காரணமாகவோ, மதிப்பெண் காரணமாகவோ, அழுத்தம் தரவில்லை; தரவும் கூடாது. உரிய நேரத்தில், உணவு, துாக்கம், விளையாட்டு என, திட்டமிட்டால் போதும். இதன்பிறகும், மதிப்பெண் குறைந்தால், அதற்கேற்ற படிப்பில் சேர்ந்து சாதிக்கலாம் என, நினைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us