அறிவோம் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., | Kalvimalar - News

அறிவோம் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஏப்ரல் 19,2019,11:42 IST

எழுத்தின் அளவு :

பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமான ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச்’ (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,) கல்வி நிறுவனத்தில் விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.

படிப்பு: பி.எஸ்., - எம்.எஸ் (டூயல் டிகிரி) - 5 ஆண்டுகள்

தகுதிகள்: உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பிரிவுகளில் இன்டக்ரேட்டட் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர, மாணவர்கள் அறிவியல் பிரிவைத் தேர்வு செய்து 12ம் வகுப்பை முடித்தவராக இருக்க வேண்டும். கே.வி.பி.ஒய்., அல்லது ஐ.ஐ.டி.ஜே.இ.இ., தேர்வினை எழுதியிருக்க இருக்க வேண்டும். எஸ்.சி.பி., மூலமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 

சேர்க்கை முறை: தகுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 28

விபரங்களுக்கு: www.iiseradmission.in

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us