ஆய்வில் ஆர்வம் காட்டுங்கள் | Kalvimalar - News

ஆய்வில் ஆர்வம் காட்டுங்கள்ஏப்ரல் 09,2019,10:42 IST

எழுத்தின் அளவு :

உலகநாடுகள் சந்திரனில் மனிதர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உண்டா என்று ஆய்வு செய்ய செயற்கைக்கோள்களை அனுப்பிக்கொண்டிருந்த போது, இந்தியா, மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதை பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயற்கைக்கோள்களை அனுப்பியது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ’இஸ்ரோ’ மக்களின் நலனிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்ததன் பலனாக, இன்று நமது அனைவரின் வாழ்க்கையும் எளிதாகி உள்ளது. போக்குவரத்து நெரிசல், பருவநிலை மாறுபாடு, கடல்களில் மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகள் உட்பட நமக்கு தேவையான பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் தர நமது செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக வளம்வந்து கொண்டிருக்கின்றன. 

நாம் அனுப்பும் செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் துள்ளியமாக செயல்படுவதை உணர்ந்த உலகநாடுகள் தற்போது, அவர்களது விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் இஸ்ரோவை அணுகுகின்றன. இவ்வாறு பெரும் வளர்ச்சி கண்டுவரும் விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட இன்றைய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்று, சென்னையில் நடந்த &'வழிகாட்டி’ நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us