ஆல்பா பள்ளியில் பிரிட்ஜ் கோர்ஸ் துவக்கம் | Kalvimalar - News

ஆல்பா பள்ளியில் பிரிட்ஜ் கோர்ஸ் துவக்கம்ஏப்ரல் 08,2019,10:59 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆல்பா பள்ளி மற்றும் பன்சால் நிறுவனமும் இணைந்து இலவச &'பிரிட்ஜ் கோர்ஸ்&' துவங்கப்பட உள்ளது.

இது குறித்து ஆல்பா பள்ளியின் இயக்குனர் தனத்தியாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ- மாணவியர்களுக்காக ஆல்பா பள்ளியில் &'பிரிட்ஜ் கோர்ஸ்&' துவக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு ஆல்பா பள்ளி மற்றும் பன்சால் என்கிற நிறுவனத்துடன் சேர்ந்து நடத்துகிறது. 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அடிப்படைக்கல்வி தெரியாமல் உள்ளனர். குறிப்பாக அறிவியல், கணிதம் உட்பட பல்வேறு பாடங்களில் அடிப்படை கல்வி தெரியாமல் உள்ளனர். 

பிளஸ் 1 படிக்கும்போது, மாணவ மாணவியர்களுக்கு நிறைய சந்தேகம் எழுகிறது.இதை போக்குவதற்காகத்தான் 15 நாட்கள் இந்த சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. மேல் படிப்பு படிக்கும்போது மாணவர்களுக்கு சுமை குறையும். மேலும் இது பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும்போது அடித்தளமாக அமையும். இந்த சிறப்பு பயிற்சி வகுப்பிற்காக மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us