சாதனை சிறுவனுக்கு ஏ.ஆர்.ரகுமான் புகழாரம் | Kalvimalar - News

சாதனை சிறுவனுக்கு ஏ.ஆர்.ரகுமான் புகழாரம்மார்ச் 15,2019,11:45 IST

எழுத்தின் அளவு :

சென்னை: உலகளவில் சாதனை படைத்த தமிழக சிறுவனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த &'ரியாலிட்டி ஷோ&' ஒன்றில் சென்னையை சேர்ந்த சிறுவன் ச.லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் நிமிடத்திற்கு &'325 பீட்ஸ் பியானோ&' வாசித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் இரண்டு பியானோக்களை வாசித்து &'உலகில் சிறந்தவர்&' என்ற பட்டத்துடன் ஏழு கோடி ரூபாய் பரிசு தொகையையும் வென்றார்.

லிடியன் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்றவர். சமீபத்தில் லிடியனை அழைத்து பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் &'லிடியனின் வெற்றி இந்தியாவின் வெற்றி&' என புகழ்ந்தார். லிடியனை தன் இசைப்பள்ளியின் துாதராகவும் ஏ.ஆர்.ரகுமான் நியமித்துள்ளார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us