பழங்குடியின மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத 16 கி.மீ., பயணம்! | Kalvimalar - News

பழங்குடியின மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத 16 கி.மீ., பயணம்!மார்ச் 15,2019,11:32 IST

எழுத்தின் அளவு :

பெ.நா.பாளையம்: ஆனைகட்டி பழங்குடியின மாணவர்கள் இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத, ஆனைகட்டியில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் இருக்கும் சின்னதடாகத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டிய அவலநிலை தொடர்கிறது.

பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், எண். 24 வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்டது ஆனைகட்டி. தமிழக, கேரள எல்லையோரம் உள்ள இக்கிராமத்தைச் சுற்றியும், துாமனுார், சேம்புக்கரை, பனப்பள்ளி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.இங்குள்ள பழங்குடியின மக்கள் கல்வி கற்க, ஆனைகட்டியில் பழங்குடியினர் துறை சார்பில் உண்டு, உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி கடந்த, 1966ம் ஆண்டு துவக்கப்பட்டு, படிப்படியாக துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என, தற்போது உயர் நிலைப்பள்ளியாக உயர்ந்து நிற்கிறது.

இன்று மதியம் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை இப்பள்ளியில் படிக்கும், 59 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்கள் பொது தேர்வு எழுத, ஆனைகட்டியில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் உள்ள, சின்னதடாகம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.இச்சிக்கலை போக்க, ஆனைகட்டி கிராமத்தில் இதே பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மையத்தை அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, ஆனைகட்டி பொதுமக்கள் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, மாவுத்தும்பதி, முட்டத்துவயல் ஆகிய இடங்களில் மட்டுமே உயர்நிலைப்பள்ளி நிலையில் பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளி செயல்படுகிறது.பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டா முத்துார் மற்றும் மேட்டுப்பாளையம் வேல்ஸ்புரம் ஆகிய இடங்களில் உள்ள ஆதி திராவிட பள்ளிகள் மட்டும் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் பொதுத் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று, அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வரும் ஆனைகட்டி உண்டு, உறைவிட உயர் நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு கவனம் செலுத்த மறுக்கிறது.இங்கு, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பள்ளியில் பயிலும் பழங்குடியின மக்களை மேம்படுத்தும் நோக்கில், இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி சட்டசபையில் பேசியும் பயன் இல்லாமல் உள்ளது.

இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.சிறப்பு வாகனம் இயக்கம்!கல்வித்துறையினர் கூறுகையில், &'ஆனைகட்டி உண்டு, உறைவிடப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் இன்று மதியம் சின்னதடாகம் அரசு பள்ளிக்கு வந்து செல்ல சிறப்பு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆனைகட்டி உண்டு, உறைவிடப்பள்ளியை தரம் உயர்த்துவும், ஆனைகட்டியில் தேர்வு மையம் அமைக்கவும் தேவையான நடவடிக்கை அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு செய்யப்படும்&' என்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us