அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்படுமா? பெண்கள் எதிர்பார்ப்பு | Kalvimalar - News

அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்படுமா? பெண்கள் எதிர்பார்ப்புமார்ச் 13,2019,11:05 IST

எழுத்தின் அளவு :

கம்மாபுரம்: கடலுார் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களை, மழலையர் பராமரிப்பு மையங்களாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வேலைக்கு செல்லும் பெண்கள் 5 வயது வரையுள்ள அவர்களுடைய குழந்தைகளை பராமரிப்பதில் மிகுந்த சிரமம் அடைந்தவர். இதை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஜெ., 2015ல், 110 விதியின் கீழ், அங்கன்வாடி மையங்களில், மழலையர் பராமரிப்பங்களாக தரம் உயர்த்த உத்தரவிட்டார்.

அதன்படி, பெரம்பலுார், கன்னியாகுமாரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், 211 மழலையர் பராமரிப்பககங்கள் முதற்கட்டமாக துவங்கப்பட்டன.

அங்கன்வாடி மையங்களோடு இணைந்து செயல்படும், இந்த மழலையர் பராமரிப்பகங்களுக்கு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, 2 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இங்கு குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு, பராமரிப்பகங்கள் சிறப்பாக செயல் படுகின்றன. கடலுார் மாவட்டத்திலும், வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

கணவர், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

எனவே, கடலுார் மாவட்டத்திலும், தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த வேண்டுமென பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us