அரசு பள்ளியில் வாசித்தல் திருவிழா | Kalvimalar - News

அரசு பள்ளியில் வாசித்தல் திருவிழாமார்ச் 11,2019,10:21 IST

எழுத்தின் அளவு :

பாகூர்: கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் வாசித்தல் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு, தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். 

பள்ளி கல்வி இயக்குனர் ருத்ர கவுடு முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் குப்புசாமி, சமக்ரா சிக் ஷா திட்ட இயக்குனர் மொஹீந்தர் பால், தொடக்க கல்வி துணை இயக்குனர் மைக்கேல் பெனோ, முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன், பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி் சிறப்புரையாற்றினர்.

ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, போன்ற பல தலைப்புகளில் மாணவர்கள் தங்களின் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். அவற்றை பார்வையிட்ட அமைச்சர் கந்தசாமி, கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு உள்ளிட்டோர், மாணவர்களிடம் படைப்புகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர். 

அப்போது, மாணவர்கள் தயக்கமின்றி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் சரளமாக பதில் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு வாசித்தல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us