விதிகளை மதிப்போம்; விபத்தை தவிர்ப்போம்! உறுதிமொழியேற்ற பள்ளி மாணவர்கள் | Kalvimalar - News

விதிகளை மதிப்போம்; விபத்தை தவிர்ப்போம்! உறுதிமொழியேற்ற பள்ளி மாணவர்கள்பிப்ரவரி 12,2019,11:29 IST

எழுத்தின் அளவு :

பொள்ளாச்சி;&'சாலை விதிகளை கடைபிடித்து, விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும்,&' என, பொள்ளாச்சி நகராட்சி பள்ளி விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் இந்திரஜித் வரவேற்றார். 

மேற்கு எஸ்.ஐ., சின்னகாமணன் பேசியதாவது:
  • சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 
  • பள்ளிக்கு வரும் போதும்; பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போதும் கவனமுடன் ரோட்டை கடக்க வேண்டும்.
  • வாகனங்கள் வருகிறதா என பார்த்துச் செல்ல வேண்டும். 
  • கவனமின்றி சாலைகளை கடக்க கூடாது; வேகமாக ஓடக்கூடாது. 
  • வாகனங்களில் செல்லும் போது, கவனமாக செல்ல வேண்டும். 
  • மற்ற வாகனங்களை முந்திச் செல்ல அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.பள்ளிப் பருவ வயதில் இருந்தே, சாலை விதிகளை கடைபிடிக்க துவங்கினால், மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • &'ெஹல்மெட்&' அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது என்றும்; &'சீட் பெல்ட்&' அணியாமல் கார் இயக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் அறிவுறுத்த வேண்டும்.
  • &'சிக்னல்&' பகுதியில் எப்படி ரோட்டை கடக்க வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். 
  • விபத்தில் சிக்குவதால் ஒரு குடும்பமே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, கவனமுடன் வாகனம் ஓட்ட வேண்டும்.

இவ்வாறு, பேசினார். நிகழ்ச்சியில், &'போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம்; விபத்துகளை தவிர்ப்போம்,&' என மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us