முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் | Kalvimalar - News

முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்பிப்ரவரி 12,2019,11:27 IST

எழுத்தின் அளவு :

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நிறுவன நாள், வித்யாலய முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் ஆகியன நடந்தன.மாற்றுத்திறனாளிகள் கல்வி நிறுவன முதன்மையர் முத்தையா வரவேற்றார். ஹரித்துவார் ராமகிருஷ்ண மிஷன் சேவா ஆசிரமத்தின் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தாஜி தலைமை வகித்தார். 

விழாவில், சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு பேசுகையில், &'&'வித்யாலய கல்வி நிறுவனங்கள், சுயசார்பு, உடல் நலம், தேசபக்தி மிக்க மாணவர்களை உருவாக்கியுள்ளது,&'&' என்றார்.விழாவில், முன்னாள் மாணவர்கள் செய்தி மடல் வெளியிடப்பட்டது. 450க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பல்கலை விரிவுரையாளர் பொன்னுசாமி, அரசு பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கவுரவப்படுத்தப்பட்டனர். விழாவில், வித்யாலய நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us