மாநில அளவில் போட்டிகள் சிவகாசி கல்லுாரி முதல் இடம் | Kalvimalar - News

மாநில அளவில் போட்டிகள் சிவகாசி கல்லுாரி முதல் இடம்பிப்ரவரி 12,2019,11:25 IST

எழுத்தின் அளவு :

சிவகாசி:சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களால் உருவாக்கப்பட்ட விதைப் பந்துகளை மற்ற கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்கினார். 

துறை தலைவர் குருசாமி வரவேற்றார். பேராசிரியர் நாகராஜன் பேசினார். மதுரை , சிவகாசி பகுதி 15 கல்லுாரிகளிலிருந்து 23 குழுக்களாக 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். கோலம், தனிப்பாடல், குழு நடனம், கவிதை எழுதுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்று சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல் இடத்தை பிடித்தது. விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி இரண்டாம் பிடித்தது. துறை உதவி பேராசிரியர் குலோத்துங்க சோழன் நன்றி கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us