விவசாயத்தில், ரோபோ கால்பதிக்கும்: வேளாண் பல்கலை துணைவேந்தர் | Kalvimalar - News

விவசாயத்தில், ரோபோ கால்பதிக்கும்: வேளாண் பல்கலை துணைவேந்தர்பிப்ரவரி 11,2019,10:08 IST

எழுத்தின் அளவு :

கோவை: தொழில்நுட்ப வளர்ச்சியால், விவசாய நிலங்களில், ரோபோக்கள் கால்பதிக்கும், என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் பேசினார்.

கோவை அடுத்துள்ள நவாவூரில் உள்ள, அண்ணா பல்கலை மண்டல மையத்தில், நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா முன்னிலையில் பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர், குமார், பேசியதாவது:இன்ஜினியரிங் தொழில்நுட்பம், வேளாண் துறையில் கால்பதித்து வருகிறது. 2018ல், 28.30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

காய், கறி, பழங்கள் உற்பத்தியில், சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளோம்.விவசாயத்தில் மனித ஆற்றல் குறைந்து, இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், விவசாய நிலங்களில், &'ரோபோ&'க்களின் கால்பதிப்பு இருக்கும். தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us