பாடத் திட்டம் மாற்றம்: ஜூலை மாதம் தள்ளி போன அரசுப் பணியாளர் தேர்வு! | Kalvimalar - News

பாடத் திட்டம் மாற்றம்: ஜூலை மாதம் தள்ளி போன அரசுப் பணியாளர் தேர்வு!பிப்ரவரி 09,2019,10:37 IST

எழுத்தின் அளவு :

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-Iல் அடங்கிய பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு வருகிற மார்ச் 3ம் தேதி அன்று நடைபெறும் என்றும் மே மாத கடைசியில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.

முதனிலை தேர்வில் (Preliminary) தேர்ச்சி பெற்று முதன்மை (Main) எழுத்து தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த விபரங்களைத் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது முதன்மைத் தேர்விற்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு 2019 ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என நிர்வாகம் உத்தேசித்துள்ளது. மேலும் முதனிலைத் தேர்வு முன்னர் அறிவித்தது போலவே மார்ச் 3ம் தேதி நடத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

தேர்வர்கள் முதன்மைத் தேர்விற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி புதிய தேர்வுத் திட்டம் மற்றும் பாட திட்டத்திற்கு ஏற்றவாரு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us