நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சி குறித்த சர்வதேச கருத்தரங்கம் | Kalvimalar - News

நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சி குறித்த சர்வதேச கருத்தரங்கம்பிப்ரவரி 08,2019,12:28 IST

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையுடன் (டிபார்ட்மெண்ட் ஆப் கிரிமினாலஜி) இணைந்து ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் ‘நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் அதற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள்’ குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் சமூகவியல் துறையால் இரண்டு நாட்களுக்கு 6 அமர்வுகளாக நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளை சார்ந்த சிறந்த பேச்சாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

குற்றவியல் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவரும், ஐக்கிய நாடுகளின் சபையில் மூத்த ஆலோசகராகவும் இருக்கும் டாக்டர்.ஸ்லாவோமிர் ரீடு சிறப்பு விருந்தினராக இருந்து கருத்தரங்கை வழி நடத்தினார்.  இந்த மாநாட்டில் ‘காலநிலை மாற்றம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் ஆகியவற்றைச் சமாளித்து நிலையான வளர்ச்சியை அடைவது’ என்பது கருப்பொருளாக வைக்கப்பட்டிருந்தது. இதை அறிமுகப்படுத்தியதோடு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு ஒரு புத்தகத்தையும் சிறப்பு விருந்தினரான ஸ்லாவோமிர் வழங்கினார்.

மேலும் அவர்  “நாம் ஏற்கனவே சுற்றுச்சூழலை அழிவில் இருந்து காப்பாற்றுவதில் காலம் தாழ்த்திவிட்டோம், உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us