மாணவர்களிடம் ஆராய்ச்சி ஆர்வம் மத்திய அமைச்சர் வேண்டுகோள் | Kalvimalar - News

மாணவர்களிடம் ஆராய்ச்சி ஆர்வம் மத்திய அமைச்சர் வேண்டுகோள்ஜனவரி 18,2019,11:11 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி, &'&'முதல் வகுப்பு படிக்கும்போதே, மாணவர்களிடம், ஆராய்ச்சி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்,&'&' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் தான், தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. அதனால், துவக்க பள்ளிகளிலிருந்தே, மாணவர்கள் மனதில், ஆராய்ச்சி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.கணிதம் மிகவும் சுவாரஸ்யமான பாடம்; அதை, மாணவர்களுக்கு மிகவும் எளிமையாக, ஆர்வத்துடன் கற்றுதர வேண்டும்.கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை, மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ள, மிகப் பெரிய சாதனங்கள் எதுவும் தேவையில்லை. சிறந்த வழிகள், சிந்தனைகளே போதுமானது. 

அதனால் தான், மாணவர்களின் வாழ்வில், துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.மாணவர்களிடம், கணிதம் மற்றும் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த, ஐ.ஐ.டி,, எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை பயன்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், தங்கள் அருகில் உள்ள, ௧௫ பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியலில், சிறந்த பயிற்சியளிக்க வேண்டும்.அறிவியல் மற்றும் கணிதத்தில், துவக்கத்திலேயே ஆர்வம் ஏற்படாவிட்டால், அதன் பின் ஆர்வத்தை ஏற்படுத்துவது, மிகவும் சிரமம். ஆராய்ச்சிக்கு, மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us